Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

256 இடங்களில் ‘சார்ஜிங்’ மையங்கள் - மத்திய அரசு அனுமதி

ஜனவரி 04, 2020 07:52

புதுடெல்லி: மோட்டார் வாகனங்களால் ஏற்படும் புகை மாசுவை குறைக்க பேட்டரி வாகனங்களை பயன்படுத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அத்துடன் பேட்டரி வாகனங்களுக்கு மானியமும் அளித்து வருகிறது. மேலும் பேட்டரி வாகனங்களுக்கு ‘சார்ஜிங்’ செய்வதற்கான மையங்களையும் அமைத்து வருகிறது.
 
இந்த நிலையில் தற்போது 62 நகரங்களில் பேட்டரி வானங்களுக்கான 2,636 ‘சார்ஜிங்’ மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைப்பதன் மூலம் மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்றார்.

பேட்டரி வாகனங்களுக்காக அமைக்கப்படும் 2,636 சார்ஜிங் மையங்களில் தமிழகத்தில் 256 இடங்களில் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி சென்னையில் 141-ம், கோவையில் 25-ம், மதுரையில் 50-ம் அமைக்கப்படும். வேலூர், சேலம், ஈரோடு மற்றும் தஞ்சையில் தலா 10 மையங்கள் அமைக்கப்படும்.

தலைப்புச்செய்திகள்