Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான்கான் கவலைப்பட வேண்டியதில்லை: ஓவைசி

ஜனவரி 05, 2020 05:29

ஐதராபாத்: பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான்கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாக ஒரு வீடியோவை பதிவு செய்து இந்திய அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார். 

இதற்கு உத்தரப்பிரதேச போலீசார் மறுப்புத் தெரிவித்ததையடுத்து இம்ரான் கான் பதிவு செய்த வீடியோக்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் பதிவு செய்யப்பட்டது என்றும், போலியாக இந்த வீடியோவை பதிவு செய்து இந்தியா மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டுவதாகவும் தெரிவித்தனர்.

தான் பதிவு செய்த வீடியோ தவறானது என்பதை உணர்ந்த இம்ரான்கான் தனது டுவிட்டரில் இருந்து அந்த வீடியோக்களை நீக்கினார். இந்த சம்பவம் குறித்து இந்திய தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்களவை எம்பி ஓவைசி, “இந்திய முஸ்லீம்கள் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலைப்பட வேண்டாம் என்றும், ஜின்னாவின் தவறான கொள்கையை நிராகரித்துவிட்டதாகவும், இந்திய முஸ்லீம்களாக இருப்பதை பெருமையாக கருதுகிறோம்” என்றார். 

தலைப்புச்செய்திகள்