Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஹாராஷ்டிரா அமைச்சரவையில் தீவிரமடையும் குழப்பம்: தொடரும் ராஜினாமா

ஜனவரி 05, 2020 05:46

மும்பை : மஹாராஷ்டிரா அமைச்சரவையில் இலாக்கா ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று சிவசேனா அமைச்சர் அப்துல் சத்தார் ராஜினாமா செய்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று (ஜன.,05) காங்., எம்எல்ஏ., கைலாஷ் கோரன்டியால் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது 10 அமைச்சர்கள் உள்ள மஹா., அமைச்சரவையில், ஜன.,06 ல் மேலும் 26 அமைச்சர்களை இணைத்து, விரிவாக்கம் செய்ய முதல்வர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். இதில் உள்துறை மற்றும் நிதித்துறை தேசியவாத காங்.,க்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக ஆளும் சிவசேனா-காங்.,-தேசியவாத காங்., கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 3 கட்சிகளிலும் பலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அதிருப்தியின் வெளிப்பாடாக காங்.,ல் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்த அப்துல் சத்தார் நேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று காங்.,ன் கைலாஷ் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜன.,4 ம் தேதி நடந்த மாவட்ட அளவிலான கட்சி ஆலோசனை கூட்டத்தின் போது தான் ராஜினாமா முடிவை எடுத்ததாக அவர் கூறினார். மேலும், மஹா., காங்., கட்சி தலைவரை சந்தித்து எனது ராஜினாமாவை அளிக்க உள்ளேன். கட்சியை சேர்ந்த ஜல்னா முனிசிபல் கவுன்சில், ஜில்லா பரிஷித் உறுப்பினர்களும் என்னுடன் இணைந்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர் என்றார்.

கட்சி தன்னை ஒதுக்கி விட்டதாகவும், தனக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார். காங்.,ன் நகர தலைவரான ஷாயிக் மஹ்மூதும் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளார். தொடரும் அதிருப்தியாளர்களின் ராஜினாமாவால் சிவசேனா - காங்., கூட்டணி மட்டுமல்லாது, கட்சிக்குள்ளும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்