Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்று 16 நாட்டு தூதர்கள் காஷ்மீர் வருகை

ஜனவரி 09, 2020 04:21

புதுடில்லி; 16-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாட்டு தூதர்கள் கொண்ட குழுவினர் இன்று ஜம்மு-காஷ்மீர் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஐரோப்பியன் யூனியன் எம்.பி.க்கள் குழுவினர் தனிப்பட்ட பயணமாக காஷ்மீர் வருகை தந்தனர்.

இந்நிலையில் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கொண்ட குழுவினர் இன்று ஜம்மு-காஷ்மீர் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குழுவினர் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் முர்முவை சந்தித்து பேசுகின்றனர். காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்வர். பின்னர் டில்லி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

தலைப்புச்செய்திகள்