Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சின்னமனூர் ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைப்பு

ஜனவரி 11, 2020 01:23

தேனி: வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் வராததால், சின்னமனூர் ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மறைமுகத் தேர்தல் முழுவதும் ஆடியோ இல்லாத வீடியோவாகப் பதிவு செய்யவும் மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்தில் மொத்தம் 10 வார்டுகள் உள்ளன. இதில், அதிமுக 4 இடங்களையும் திமுக 6 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், திமுகவில் இருந்த பெண் உறுப்பினர் ஜெயந்தி அதிமுகவுக்குச் சென்றதால் அதிமுகவின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. திமுகவின் எண்ணிக்கை 6 இல் இருந்து 5 ஆக குறைந்துள்ளது.

இரு கட்சிகளும் தலா 5 வேட்பாளர்களைப் பெற்றுள்ள நிலையில் இன்று காலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அதிமுக உறுப்பினர்கள் 5 பேர் வரவில்லை என்பதால், தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்