Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா

ஜனவரி 12, 2020 07:44

கும்பகோணம்: கும்பகோணம் ஜனவரி 11 கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. 

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வருகின்ற 15 ம் நாள் கொண்டாடப் படுவதை முன்னிட்டு கார்த்தி வித்யாலயா பள்ளியில் கொண்டப் பட்டது. இந்நிகழ்ச்சியானது தமிழர் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் எடுத்து உரைப்பதாக இருந்தது. பழங்கால பொருட்களான நாற்காலி, அம்மிக்கல், உரல், உலக்கை ஆகியவை இடம் பெற்று இருந்தன. 

அக்கால வீடுகள் போன்று அமைக்கப்பட்டு அவ்வீட்டினுள் தமிழர்கள் பயன்படுத்திய விளக்கு, சமையல் செய்யும் பொருட்கள் ஆகியவை காட்சி படுத்தபட்டு இருந்தன. மாணவ மாணவிகளுக்கு இடையே கல் தூக்கும்  போட்டி , உரி அடித்தல் ,பம்பரம் விளையாடுதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன.போட்டியின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் தமிழரின் பெருமை, விவசாயம், மண் வளம் போன்றவற்றை  எடுத்து உரைக்கும் பாடல்களுக்கு அழகாக நடனமாடினார். 

L.k.g, u.k.g வகுப்பு குழந்தைகள் விவசாயி போல் உடை அணிந்து வந்து விவசாயிகளின் பெருமையை தங்களின் மழலை மொழியில் கூறினார்கள். தமிழரின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பறை, போன்றவையும் இடம் பெற்று இருந்தன. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து மாணவ மாணவிகள், ஆசிரிய ஆசிரியைகள் பாரம்பரிய உடையில் வருகை தந்து இருந்தனர். இவ்வாறான நிகழ்ச்சிகள் நடத்தபடுவதன் மூலம் மாணவ மாணவிகள் விவசாயம் , தமிழரின் பெருமை, பாரம்பரியம், பொங்கல் விழா பற்றி அறிந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர்  கார்த்திகேயன்  பொங்கல் விழா எதற்காக கொண்டாடுகிறோம் என்பது பற்றி மாணவ மாணவிகளுக்கு எடுத்து கூறினார்கள். பன்னாட்டு பள்ளி தாளாளர்  பூர்ணிமா கார்த்திகேயன் அனைவரும் ஓற்றுமையுடனும், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவ மாணவிகள் நடந்து கொள்ள வேண்டும் என கூறினார்கள்.

பள்ளி முதல்வர்  அம்பிகாபதி  அனைவரையும் வரவேற்று வரவேற்ப்புரை வழங்கினார்கள். தனித்தன்மை வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மாணவ மாணவிகள் , ஆசிரியைகள் பொங்கலிட்டு, குலவையிட்டு கொண்டாடி மகிழ்ந்தார்கள். தித்திக்கும் பொங்கலினை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்கள.

தலைப்புச்செய்திகள்