Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடியுரிமை திருத்தச்சட்டம்: முதல் மாநிலமாக பட்டியலை சமர்ப்பித்தது உத்தர பிரதேசம்

ஜனவரி 13, 2020 12:51

லக்னோ: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இதற்கிடையில் குடியுரிமை திருத்தச்சட்டம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் (ஜனவரி 10) நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி தங்கள் மாநிலத்தில் குடியுயேறியுள்ள சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியலை உத்தரபிரதேச மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்த சில நாட்களிலேயே உத்தர பிரதேசம், முதல் மாநிலமாக தங்கள் மாநிலத்தில் உள்ள அகதிகளின் பட்டியலை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.

தலைப்புச்செய்திகள்