Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடியுரிமை சட்டம்: முதல் மாநிலமாக கோர்ட்டுக்கு செல்லும் கேரளா

ஜனவரி 14, 2020 09:34

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கம், கேரளா , மற்றும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என சொல்லி வருகின்றன.

குறிப்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார். இடதுசாரி ஆளும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது இதனை ஏற்க இயலாது. இதற்கு மாநில சுதந்திர தலையீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா முதன்முதலில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்புச்செய்திகள்