Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சபரிமலையில் மகரஜோதி தெரிந்தது: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஜனவரி 15, 2020 01:58

திருவனந்தபுரம்: சபரி மலையில் ஐயப்பன் கோவிலில் சரண கோஷம் விண்ணை பிளக்க மகர ஜோதி தெரிந்தது. சபரி மலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்தைக் காண சபரிமலை ஐயப்பன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.சபரி மலையில் தங்க அங்கி அலகாரத்தில் ஐயப்பன் தரிசனம் அளித்தார். திருவாபரணங்களை சாமி ஐயப்பனுக்கு அணிவித்து விஷேச தீபாராதனை நடக்கும் நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை இன்று நடக்கிறது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது.

31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று முன்தினம் பகல் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இன்று மாலை 6.30 மணிக்கு ஊர்வலம் சன்னிதானத்தை அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். அப்போது தான் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும்.

மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகரஜோதி தென்படும் பகுதிகளில் பக்தர்கள் தற்போதே குடில்கள் அமைத்து தங்கியுள்ளனர். மகரசங்கிரம பூஜை: மகரவிளக்கு பூஜை தினத்தில் மகரசங்கிரம பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மகரசங்கிரம பூஜை இன்று அதிகாலை 2.09 மணிக்கு நடந்தது. அதிகாலையில் இந்த பூஜை நடந்ததால் நேற்று இரவு கோயில் நடை சாத்தப்படவில்லை.

தலைப்புச்செய்திகள்