Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் பரிசு வழங்கவிடாமல் தி.மு.க. தடுத்தது: அமைச்சர் காமராஜ்

ஜனவரி 19, 2019 12:03

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி கொல்லு மாங்குடியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 102-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நன்னிலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர் காமராஜ், நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:- 

பொங்கல் சிறப்பு பரிசு 1000 ரூபாய் பொது மக்களுக்கு வழங்குவதை தடுக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது. எப்படி முயற்சி செய்தாலும் திமுக அதில் தோல்வியை அடையும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். 

கொடநாடு விவகாரத்தில் முன்னாள் ஆசிரியர் மேத்திவ்ஸ் அறிக்கையை சுட்டி காட்டி ஸ்டாலின் முதலமைச்சரை பதவி விலக வேண்டும் என சொல்கிறார். சயன் என்ற கூலிப்படை தலைவன் சொல்வதை கேட்டு பதவி விலக சொல்கிறார். இதில் என்ன நியாயம் இருக்கிறது. 

ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை கலைக்க முயற்சி செய்தனர். அது நடக்காததால் தற்போது இருவரும் அடித்து கொள்வது போல் நடித்து கொள்கின்றனர். டி.டிவி தினகரன் வாயை திறந்தாலே பொய்யாக பேசுகிறார். 


நமது ஊரை பொறுத்த வரை தினகரன் ஜீரோ. தினகரனால் 18 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அரசியல் வாழ்கையை இழந்து தவிக்கின்றனர். எத்தனை பேர் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். 

 

தலைப்புச்செய்திகள்