Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தைகள் கிறுக்கல் மூலம் பாடல் பாடும் செயலி

ஜனவரி 17, 2020 10:20

சென்னை: சுவற்றில் ஒட்டப்பட்ட காகித்ததில் குழந்தைகளின் கைவண்ணத்தில் வரையப்படும் கிறுக்கல்கல்கள் மூலம் பாடல் பாடும் செயலி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

சென்னையில் 43வது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படுள்ளன. கூடுதல் சிறப்பாக குழந்தைகளுக்கு ஏதுவாகவும் சில அம்சங்கள் கொண்ட புத்தகக் கடைகளும் தென்படுகின்றது. அதில் ஒரு கடையில் சற்று வித்தியாசமான காகிதங்கள்  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

பொதுவாக வீட்டில் குழந்தைகள் சுவற்றில் கிறுக்குவது வாடிக்கை. ஆனால் அதற்கு பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. குழந்தைகளை கிறுக்கல் வழி கற்றல் முறைக்கு வழிவகை செய்கிறது இந்த காகிதம். இந்த காகிதத்தை வீட்டின் சுவற்றில் ஒட்டினால் போதும். 

அவ்வப்போது குழந்தைகள் அதில் கிறுக்கினால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அந்த வெள்ளைக் காகிதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் கிறுக்கலாம். பிறகு அழித்து கொள்ளலாம். கிரையான், ஸ்கெட்ச், பென்சில் எதில் எழுதினாலும் மீண்டும் அழித்து புதுப்பித்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கபட்ட காகிதம் சென்னை புத்தக்காட்சியில் விறபனைக்கு வைக்கபட்டுள்ளது.

இந்த காகிதத்தில் எந்த படம் வரைந்தாலும் அந்த படம் அருகே இன்க்மியூ என்ற அப்ளிகேசனை டவுன்லோடு செய்து, செல்போனின் கேமிராவை படத்தின் முன்பு காட்டினால், அந்த படம் சம்பந்தமான குழந்தைகள் ரசிக்கும் பாடல் ஒளிபரப்பாகிறது என்பது இதன் சிறப்பம்சம். 100 முதல் 350 ரூபாய் வரை வரைபடங்கள் கொண்ட காகிதங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு உள்ளன.

குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தவும், வீட்டின் சுவற்றை பாதுகாக்கவும் இந்த அப்ளிகேசமும், காகிதமும் நன்கு உதவுவதாக புத்தக காட்சியில் இதனை வாங்க குவியும் பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்