Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தாலும் குற்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை: போலீஸ் கமிஷனர்

ஜனவரி 18, 2020 05:26

சென்னை: தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மெரினா கடற்கரையில் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து ஓடி, ஆடி விளையாடி மகிழ்ந்தனர். சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் உற்சாகத்தில் திளைத்தனர். 

சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, சென்னை நந்தனம் புத்தக கண்காட்சி, சென்டிரல் அருகே நடைபெறும் சர்க்கஸ் ஆகிய இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

சென்னை மெரினா கடற்கரையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் மக்கள் அதிகம் கூடிய மற்ற இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

காணும் பொங்கலையொட்டி நேற்று மாமல்லபுரத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தல் தற்போது அந்த இடமே குப்பை கூளமாக காட்சியளித்தது அதை சுத்தம்செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

காணும் பொங்கலையொட்டி, மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிந்தாலும் எந்தவிதமான குற்ற சம்பவங்களும் பதிவாகவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறினார். 

தலைப்புச்செய்திகள்