Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

50 குண்டுவெடிப்புக்களை நடத்திய பலே ஆசாமி மாயம்

ஜனவரி 18, 2020 06:21

புதுடில்லி : மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புக்களை நிகழ்ச்சி, 'மிஸ்டர் பாம்' என பெயர் பெற்ற பயங்கரவாதி, பரோலில் வந்த போது மாயமாகி உள்ளான்.

டாக்டர் ஜலீஸ் அன்சாரி, 90 களின் முற்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஜெய்பூர் தொடர் குண்டுவெடிப்பு, அஜ்மர் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புக்களில் தொடர்புடையவன். ஆயுள் தண்டனை பெற்று அஜ்மிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்சாரி, மும்பையில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக டிச.,28 ம் தேதி சுப்ரீம் கோர்ட் பரோல் அளித்ததை அடுத்து, வெளியே வந்தான். 

கோர்ட் உத்தரவின் படி (ஜன.,17) காலை அவன் சிறைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அன்சாரி மாயமாகி விட்டதாக அக்ரிபடா போலீஸ் ஸ்டேஷனில் அவனின் குடும்பத்தினர்  (ஜன.,16) புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது,  காலை 5 மணிக்கு தொழுகைக்காக சென்ற அன்சாரி அதன் பிறகு வீடு திரும்பவில்லை என தெரிய வந்துள்ளது. பலமணி நேரம் ஆகியும் வீடு திரும்பாததாலும், அவரது மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாலும் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். 

மாயமான அன்சாரியை மும்பை போலீசார் மற்றும் மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர். தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அடையாளம் காட்டப்படும் அன்சாரி, பாக்.,ல் உள்ள பயங்கரவாத மையத்தில் பயிற்சி பெற்றவன். தடைசெய்யப்பட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களுடனும் அன்சாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்