Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேண்டாம் கல்பாடியில் டாஸ்மாக் கடை: கையெடுத்து கும்பிட்டு பெண்கள் போராட்டம்

ஜனவரி 21, 2020 08:19

பெரம்பலூர்: கல்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அ ந்த கிராம பெண்கள் கையெடுத்து கும்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில்   நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 

இந்த நிலையில் கல்பாடி கிராம பெண்கள் திரண்டு ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்  துணை தலைவர் புஷ்பராஜ் ஆகியோர்  தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக்  கடையை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நூதன போராட்டமாக கலெக்டர் அலுவலகம் முன்பு கையெடுத்து கும்பி டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களில் சிலர் கலெக்டர் சந்தாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில்  எங்கள் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள  பால்பண்ணை  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் அருகே அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. டாஸ்மாக் கடையை  கடந்து தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  நூலகம்  ரேஷன் கடை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்ல வேண்டும்.

தற்போது அந்த டாஸ்மாக் கடையில் மது குடிப்பவர்கள் குடி போதையில் அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி  கிண்டல் செய்கிற £ர்கள். மேலும் கணவன்மார்கள் வேலை செய்து கிடைத்த கூலியை வீட்டில் கொடுக்காமல் மதுபானம் குடித்து அழிக்கின்றனர். இதனால்  குடும்பம் நடத்த முடியவில்லை  அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. 

பள்ளி மாணவர்களும் குடி போதைக்கு அடிமையாகும் அபாயம்  உள்ளது. எனவே கல்பாடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கூறியிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்