Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிஏஏ.,வை தொடர்ந்து என்பிஆர்., எதிர்ப்புக்கு தயாராகும் காங்கிரஸ்

ஜனவரி 22, 2020 07:25

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து தேசிய மக்கள்தொகை பதிவையும்(என்பிஆர்) எதிர்க்க வேண்டும் எனவும், என்பிஆர்., கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்க கூடாது எனவும் காங்., ஆளும் மாநில அரசுகளை காங்., தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏஏ.,வை அமல்படுத்த கூடாது என கடந்த வாரம் காங்., ஆளும் மாநிலங்களை அக்கட்சி கேட்டுக் கொண்டது. மேலும் சிஏஏ.,வுக்கு எதிராக எதிராக காங்., ஆளும் மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் காங்., கேட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது தேசிய மக்கள் தொகை பதிவுக்கு காங்., ஆளும் மாநில அரசுகள் ஒத்துழைக்க கூடாது எனவும், ஏப்ரல் மாதம் துவங்கும் கணக்கெடுப்பை அனுமதிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. என்பிஆர்.,ஐ அனுமதிக்க மாட்டோம் என கேரள அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், காங்., ஆளும் மாநிலங்களையும் மத்திய அரசின் கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்கக் கூடாது என அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.

காங்., கட்சியின் செய்தி தொடர்பாளரான கபில்சிபல் கூறுகையில், சிஏஏ., தான் இப்போதுள்ள ஒரே பிரச்னை. என்பிஆர் பணிகள் ஏப்.,1 ம் தேதி முதல் தான் துவங்க உள்ளதால் இப்போது அது பிரச்னை இல்லை என கூறி உள்ளார். 

சிஏஏ தொடர்பாக 144 மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்க உள்ளது. ராம் ஜென்மபூமி விவகாரம் போவ்று, இதையும் சட்டமாக்க உள்ளதா அல்லது ஏவறு விதத்தில் விசாரிக்கிறதா என்பதை பார்ப்போம் என தெரிவித்துள்ளார். இருப்பினும் என்பிஆர்.,க்கு எதிரான போராட்டத்தை துவக்க காங்., இப்போதே தயாராகி விட்டது.

தலைப்புச்செய்திகள்