Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு 2020: தமிழகத்தில் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 17% சரிவு

ஜனவரி 23, 2020 06:14

சென்னை: 2020ம் ஆண்டில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17% சரிவடைந்துள்ளது. 2018 - 19ம் ஆண்டை ஒப்பிடுகையில், தமிழகத்தில் 17% பேர் குறைவாகவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில், நாடு முழுவதும் என்று எடுத்துக் கொண்டால், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை 74,000 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களால், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருப்பதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
பல முறை தேர்வு எழுதும் மாணவர்களே அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதும், கட்-ஆப் அதிகமாக இருப்பதும், ஆள்மாறாட்ட சம்பவங்களால் சில மாணவ, மாணவிகள் அதிருப்தியில் இருப்பதாலும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 4,202 மாணவர்களில் 2,916(70%) பேர் பழைய மாணவர்கள். அதனால், 2019ல் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிலர் இந்த ஆண்டு இடைவெளி விட்டுவிட்டு, நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டு அடுத்த ஆண்டில் நீட் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் சில மாணவர்கள் கூறுகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்