Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிக புகையை கக்கியபடி சென்ற ஆட்டோ: தடுத்து நிறுத்திய தமிழக அமைச்சர்

ஜனவரி 23, 2020 06:16

கரூர்: கரூரில் அதிக புகையை கக்கியபடி சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்திய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதனை சரிசெய்து ஓட்ட அறிவுறுத்தினார்.

கரூரை அடுத்த வெண்ணைமலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்று கொண்டிருந்த போது எதிரே அளவுக்கு அதிகமான புகையைக் கக்கியபடி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனைக் கவனித்த அவர் காரில் இருந்து இறங்கி ஆட்டோவை தடுத்து நிறுத்தினார்.

அதிக புகை வெளியேறுவதால் சுற்றுச் சூழல் மாசுபடும் என்றும், ஆட்டோவை முறைப்படி பராமரிப்பு செய்து இயக்கவும் அறிவுறுத்திவிட்டு அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.

தலைப்புச்செய்திகள்