Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை கல்லூரி மாணவி மிஸ் இந்தியாவாக தேர்வு

ஜனவரி 30, 2020 11:50

புதுடெல்லி: புதுடெல்லியில் கடந்த 5 நாள்களாக குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸ் இந்தியா ஆசியா போட்டி நடந்தது. இதில் 150க்கும் மேற்பட்ட மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து சென்னையை சேர்ந்த மாணவி பாஷினி பாத்திமா (19 வயது) உட்பட 3 பேர் பங்கேற்றனர். நீச்சல், நடனம், திறனறிவு, உடல் தகுதி, யோகா என 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி சுற்றில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் பாஷினி பாத்திமா 2020-ம் வருடத்திற்கான `குளோபல் மிஸ் இந்தியா ஆசியா அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

பட்டம் வென்ற பின் அவர் கூறியிருப்பதாவது:-

மாடலிங் போட்டிகளில் பங்கேற்க தமிழகப் பெண்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்கு இந்தத் துறையின் மீது உள்ள தவறான எண்ணம்தான் காரணம். அந்த எண்ணம் மாற வேண்டும். தமிழக பெண்கள் அதிக அளவில் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் என் ஆசை'.  என்று கூறினார்.

பாஷினி பாத்திமாவின் தந்தை ஜெ.எம்.பஷீர் கூறுகையில், "என்னுடைய இரண்டு மகள்களும் மாடலிங் துறையில் உள்ளனர். மிஸ் சென்னை போட்டியில் என்னுடைய இரண்டாவது மகள் பங்கேற்று மிஸ் சென்னை பட்டத்தை வென்றாள். தற்போது என் மூத்த மகள் பாஷினி பாத்திமா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்'' என்றார்.

தலைப்புச்செய்திகள்