Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிஎஸ்என்எல்-லில் இன்று ஒரே நாளில் 78,000 பேர் விருப்ப ஓய்வு

ஜனவரி 31, 2020 09:12

புதுடில்லி : நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92,700 ஊழியர்கள், அதிகாரிகள் இன்று (ஜன.,31) விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.

இவர்களில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து மட்டும் 78,000க்கும் அதிகமானவர்கள் ஓய்வு பெறவுள்ளனர். இந்தப் பெரும் விருப்ப ஓய்வுக்குப் பிறகு இவர்களில் 75 ஆயிரத்து 217 பேர் மட்டுமே மிச்சமிருப்பார்கள். பாதிக்கும் அதிகமானோர், அதாவது சுமார் 51 சதவிகிதம் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுகின்றனர்.

நிதிப் பிரச்னை, தொழில் போட்டி போன்ற பல பிரச்னைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள், ஊழியர்களை குறைப்பதன் மூலம் செலவை குறைக்கலாம் என எண்ணி, விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தன. இந்த திட்டத்தின் கீழ் 50 மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே சம்பள பாக்கி, தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதால் அச்சத்தில் இருந்த ஊழியர்கள், இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தனர். டிச.,3 வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 78,569 பேரும், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 14,378 பேரும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். இதனையடுத்து இவர்கள் அனைவரும் இன்றுடன் விருப்ப ஓய்வு பெற உள்ளனர். 

தலைப்புச்செய்திகள்