Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அவ்வையாரின் ஆத்திச்சூடி

பிப்ரவரி 01, 2020 08:38

புதுடெல்லி: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு 16 அம்ச திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
 
அப்போது, நிர்மலா தனது பட்ஜெட் உரையில் அவ்வையாரின் பாடலை சுட்டிக்காட்டி பேசினார். விவசாயம் குறித்து பேசுகையில் "பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி பேசினார். சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண் கவிஞரான அவ்வையார், வேளாண்மை பற்றி மூன்றே வார்த்தையில் போதனைகள் வழங்கியுள்ளார்.

பூமி திருத்தி உண் என்ற ஆத்திச்சூடி பாடலுக்கு விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்பது பொருள். இதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு மோடி அரசு செயல்பட்டு வருகிறது என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்