Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் கம்ப்யூட்டரையும் தாக்கும்?: என்ஜீனியர் புதிய தகவல்

பிப்ரவரி 01, 2020 08:43

புதுடெல்லி: மனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி உள்ளது. அந்த வைரஸ் பரவக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கம்ப்யூட்டர்களையும் தாக்கும் என்று என்ஜீனியர்கள் புதிய தகவல்களை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கஸ் பெர்ஸ்கை ஆன்டிவைரஸ் நிறுவனத்தை சேர்ந்த என்ஜினீயர்கள், கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களில் தீங்கிழைக்கும் கொரோனா வைரசை கண்டுபிடித்து உள்ளனர்.

இது பி.டி.எப்., எம்.பி.4 மற்றும் டாக்மென்ட் பைல்களை தாக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து என்ஜீனியர்கள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கம்ப்யூட்டகளையும் தாக்குகிறது. தற்போது கொரோனா வைரஸ் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த வைரஸ் ஏற்கனவே சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தி உள்ளனர். இதுவரை நாங்கள் 10 வைரஸ் பைல்களை பார்த்துள்ளோம். 

இந்த கொரோனா வைரஸ் பைல்கள் வளரும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று கருதுகிறோம். கொரோனா வைரஸ் போலியான டாக்மென்ட்டுகள் மூலம் மறைந்து பரவும் என்றனர்.

தலைப்புச்செய்திகள்