Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் சிவப்பு துணியில் பட்ஜெட் உரையுடன் வந்த நிர்மலா

பிப்ரவரி 01, 2020 08:45

புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டும், பாரம்பரிய முறைப்படி சிவப்பு துணியால் மூடப்பட்டு, பட்ஜெட் உரையை எடுத்து வந்துள்ளார். நிர்மலா சீதாராமன், இன்று தனது 2வது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

கடந்த ஆண்டை போன்றே, இந்த ஆண்டும் சிவப்பு துணியால் சுற்றி எடுத்து வந்தார். மஞ்சள் நிற புடவை அணிந்து, கையில் சிவப்பு துணியால் சுற்றப்பட்டு பட்ஜெட் உரையை எடுத்து வந்த நிர்மலா சீதாராமன் வழக்கமான பட்ஜெட் தாக்கல் நேரமான 90 முதல் 120 நிமிடங்கள் தனது பட்ஜெட் உரையை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக சூட்கேசில் வைத்தே பட்ஜெட் உரை எடுத்து வரப்பட்டு வந்தது. இந்த முறையை மாற்றி, கடந்த ஆண்டு முதல் முறையாக வட இந்திய பாரம்பரிய முறைப்படி சிவப்பு துணியால் சுற்றி, பட்ஜெட் உரையை நிர்மலா எடுத்து வந்தார். 89 வது பட்ஜெட் தாக்கலில் போது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த சூட்கேஸ் கலாச்சாரம் முடிவுக்கு வந்தது பலரிடமும் வரவேற்பை பெற்றது.

முக்கிய நிகழ்வுகளின் போது தோலால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பது நிர்மலாவின் நம்பிக்கை எனவும், அதனாலேயே அவர் லெதர் பேக்குகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டே, கடந்த முறை நிர்மலா பேசுகையில் மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை என்றார் எனவும் பொருளாதார தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்தார். உண்மையில் அவர் சிவப்பு துணியில் சுற்றி எடுத்து வருவது பட்ஜெட் உரை இல்லை எனவும், லெட்ஜர் அக்கவுண்ட் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்