Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்ஐசி பங்குகளை விற்க முடிவு

பிப்ரவரி 01, 2020 08:47

புதுடில்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், வங்கிகளில் டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாக்கப்படும். வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்வோம். டெபாசிட்களுக்கான காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.எல்ஐசியில் தனக்குள் பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கி திவாலானால், ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்க டெபாசிட்தாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வர்த்தக ரீதியில் செயல்படும் வங்கிகளை அரசு கவனித்து வருகிறது. மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்