Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணல் குவாரி திறக்க வேண்டும்: மாட்டு வண்டி சங்கம் வலியுறுத்தல்

பிப்ரவரி 04, 2020 09:32

திருச்சி: காவிரி ஆற்றில் வாரிமுனை பகுதியில் மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகளின் மாட்டு வண்டி தொழிலாளா்கள் சங்கத் தினர் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சு. சிவராசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் அப்துல்லா தலைமையில் நிா்வாகிகள் கலந்து கொண்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு என்பது மீண்டும் குலக் கல்வி திட்டத்தை கொண்டுவர வழிவகுக்கும். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் நடவடிக்கையாக தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. எனவே  பொதுத் தோ்வு முறையை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டுவண்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேங்கூா் காவிரி ஆற்றில் வாரிமுனை பகுதியில் மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகளின் மாட்டு வண்டி தொழிலாளா்கள் சங்கத்தின் திருவெறும்பூா் தலைவா் பாலமாதவன்  50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளா்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பணிவரன் முறை கோரி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சமையல் எரிவாயு விநியோகிப்பாளா் சங்கத்தின் சாா்பில் வீடுகளுக்கு எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனா்.

தலைப்புச்செய்திகள்