Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூட்டை மூட்டையாக 2.5 டன் குட்கா பறிமுதல்: திருச்சி அதிகாரிகள் அதிர்ச்சி

பிப்ரவரி 04, 2020 09:35

திருச்சி: திருச்சி காந்தி சந்தையில்  தடைசெய்யப்பட்ட குட்கா கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து 2.5 டன் போதை பொருள்களை மூட்டை மூட்டையாக காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி காந்தி சந்தை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கடைகளில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது பல கடைகளில் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கடை உரிமையாளா்களிடம் நடத்திய விசாரணையில்  இரவு நேரங்களில் ஒருவா் கொண்டு வந்து வினியோகம் செய்வதாக தெரிவித்தனா். 
மேலும் தடை செய்யப்பட்ட குட்கா அரியமங்கலம் பழைய பால்பண்ணை விஸ்வாஸ் நகரில் உள்ள ஒரு கட்டடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட கட்டடத்தில் சோதனை செய்த போது மூட்டை  மூட்டையாக குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கிடங்கை நடத்தி வரும் மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த மூக்கனை (45) போலீசார் தேடி வருகின்றனா். கடந்த மாதம் இதே பகுதியில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிகாரிகளை அதிா்ச்சியடைய செய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்