Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் மேகாலயா விவசாயிகளுக்கு பயிற்சி

பிப்ரவரி 04, 2020 09:36

திருச்சி: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் மேகாலயா மாநில வாழை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட தொழில்முனைவோா் பயிற்சி நிறைவு விழா  நடைபெற்றது. திருச்சி தாயனூரில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவைச் சார்ந்த 15 வாழை விவசாயிகளுக்கு கடந்த 5 நாள்களாக பயிற்சி நடைபெற்றது. 

இதில் வாழையிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களான வாழைப்பழ அத்தி  பழரசம்  ஜாம்  இனிப்பு சட்னி வாழைப்பூ ஊறுகாய்  வாழை நார் பிரித்தெடுத்தல் உள்ளிட்டவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு மேகாலயா பேசின் மேம்பாட்டு அமைப்பு நிதியுதவி அளித்தது.

இப்பயிற்சியில் சூரிய வெப்பம் மூலம் உலா் வாழைப்பழம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மேகாலயா விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட்டு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு செய்தவா்களுக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் சு.உமா சான்றிதழ் வழங்கி பேசினார்.

மேகாலயா தொழில் மேம்பாட்டு அலுவலா் போ்ஃபான் பேசுகையில் தேசிய வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மூலம் மேகாலயா விவசாயிகள் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளனா். இதன்மூலம்  மேகாலயா பெண் விவசாயிகள் உள்ளிட்டோர் வாழையை சந்தைப்படுத்தும் நுட்பத்தை அறிந்து கொண்டதோடு  தொழில்முனைவோராக முன்னேற்றமடைவா் என்றார்.

இதில்  வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் டி.சுரேஷ் கே.என்.சிவா  வி.குமார் எம்.மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

தலைப்புச்செய்திகள்