Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

மார்ச் 07, 2019 05:21

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த மோதலில் ஒரு மாவோயிஸ்ட்டை மாநில அதிரடிப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நேற்று இரவு மாவோயிஸ்டுகள் புகுந்துள்ளனர். அங்கிருந்தவர்களை சிறைப்பிடித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து அங்கு விரைந்த மாநில அதிரடிப்படை போலீசார், மாவோயிஸ்டுகள் இருந்த ரிசார்ட்டை சுற்றி வளைத்து மாவோயிஸ்டுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகளும் துப்பாக்கி சூடு நடத்தினர். 

சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான். காயமடைந்த மற்றொரு மாவோயிஸ்ட் அங்கிருந்து காட்டிற்குள் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது. அவனை அதிரடிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்