Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை: மத்திய அரசு

பிப்ரவரி 05, 2020 08:29

புதுடெல்லி: இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவையில் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து புதுச்சேரி அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் “அரசியலமைப்பு 9ன் கீழ் இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யும் திட்டம் ஏதுமில்லை“ என்றும் தெரிவித்துள்ளார்

தலைப்புச்செய்திகள்