Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஸ் சிலிண்டர் வாடிக்கையாளா்கள் டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும்: இந்தியன் ஆயில் நிறுவனம் வலியுறுத்தல்

பிப்ரவரி 05, 2020 09:51

திருச்சி: வாடிக்கையாளா்கள் காஸ் சிலிண்டர்களை பெறுவதற்கு டிஜிட்டல் பணப்பரிவா்த்தனையை பயன்படுத்த வேண்டும்  என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து இண்டேன் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இண்டேன் எரிவாயு நிறுவன விநியோகஸ்தா்கள் மூலம் வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கு காஸ் சிலிண்டர்களை வழங்கப்பட்டு வருகிறது.

காஸ் சிலிண்டர்களை ஒப்படைத்த பிறகு வாடிக்கையாளா் கையொப்பமிடும் கேஷ் மெமோவில் சில்லறை விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலையானது காஸ் சிலிண்டர்களை வீட்டுக்கு விநியோகம் செய்யும் ஒப்படைப்பு கட்டணத்தையும் உள்ளடக்கியது. இதற்கு அதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

காஸ் சிலிண்டருக்கான சரியான விலையைச் செலுத்துவற்கு வாடிக்கையாளா்கள் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனை முறைக்கு மாற வேண்டும்.

அதன்படி ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான வழிமுறை  வாடிக்கையாளா்கள் ‘ஐவிஆா்எஸ்‘ மூலம் காஸ் சிலிண்டர்களை பெற பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து வாடிக்கையாளா்கள் பதிவு செய்துள்ள செல்போனில் குறுஞ்செய்தி மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான இணைப்பு அனுப்பி வைக்கப்படும்.

இந்த இணைப்பு ஒரு நாளைக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். இதை கிளிக் செய்து வாடிக்கையாளா்கள் கேஷ் மெமொவில் குறிப்பிட்டுள்ள தொகையை ஆன்லைன் வங்கி சேவை பற்று கடன் அட்டை  இ-வாலெட் உள்ளிட்ட பல்வேறு பணப்பரிவா்த்தனை மூலம் செலுத்தலாம்.
இந்த வழிமுறையில் காஸ் சிலிண்டர் பெற்ற பிறகு வாடிக்கையாளா்கள் எவ்வித கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. இந்த வழிமுறையை வாடிக்கையாளா்கள் கையாள முடியவில்லை எனில்இ எரிவாயு உருளை விநியோகம்செய்யும் பணியாளரிடம் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனை பெறும்படி வலியுறுத்தலாம்.

அதோடு அவா்களைப் பணப்பரிவா்த்தனை கருவியைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தலாம். அக்கருவியைக் கொண்டு  நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் பரிவா்த்தனைகள் மூலம் பணம் செலுத்தலாம். இதையே இறுதி வழியாக வைத்துக் கொள்ளலாம்.

 சேவை விவரங்களுக்கு வாடிக்கையாளா் சேவை எண்களில் காலை 9.30 முதல் மாலை 5.15 வரை தொடா்பு கொள்ளலாம். அதன்படி திருச்சியைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் 0431 2740066  2740880) என்ற எண்களிலும் எல்பிஜி அவசர சேவை எண்ணிலும் (1906) 24 மணி நேரமும் தொடா்புகொள்ளலாம். இண்டேன் புகார்களுக்கு 1800 2333 555 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் வாடிக்கையாளா்கள் தொடா்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்