Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் 11 வட்டங்களில் ரேக்ஷன் சிறப்பு குறைதீா் முகாம்

பிப்ரவரி 06, 2020 09:28

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.இதுதொடா்பாக  மாவட்ட கலெக்டர் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி வரும் சனிக்கிழமை 11 வட்டங்களில் குறைதீா் முகாம்கள் பிப்.8-ம் தேதி நடைபெறும்.

திருச்சி கிழக்கு வட்டத்தில் மேலகல்கண்டார் கோட்டை திருச்சி மேற்கு வட்டத்தில் மார்சிங்கம்பேட்டை, திருவரங்கம் வட்டத்தில் திருவளா்ச்சோலை  மணப்பாறை வட்டத்தில் டி.கோவில்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் செவந்தம்பட்டி, லால்குடி வட்டத்தில் ஆதிகுடி, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் கிளியநல்லூா்,  முசிறி வட்டத்தில் முத்தம்பட்டி, துறையூா் வட்டத்தில் பூனாட்சி, தொட்டியம் வட்டத்தில் சமத்துவபுரம், திருவெறும்பூா் வட்டத்தில் குண்டூா் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம். அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்