Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக-சிவசேனாவின் கருத்து வேறுபாடு நாட்டின் வளர்ச்சியை பாதிக்காது: உத்தவ் தாக்கரே

மார்ச் 07, 2019 05:34

மும்பை: பாஜக - சிவசேனா இடையேயான கருத்து வேறுபாடு நாட்டின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.  

மராட்டிய அரசு சார்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய தொழில் கொள்கையை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். மும்பையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டார். இந்த புதிய தொழில் கொள்கை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை இலக்காக வைத்து இந்த தொழில் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. 

உலகளாவிய தொழிலதிபர்கள் மராட்டியத்தை தங்களது வீடாக கருதி இங்கு முதலீடுகளை தொடங்க விரும்புகிறார்கள். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் வேலைக்காக இடம்பெயராமல் சொந்த மண்ணிலேயே வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் அரசு தான் வெற்றிகரமான அரசாகும். 

2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டணியான எங்கள் இரு கட்சிகளுக்கும் இடையே பல விஷயங்களில் ஒத்துவரவில்லை. 

கடந்த சில நாட்களாக பாஜக அரசின் நற்செயலை கவனித்து வருகிறேன். பாஜக - சிவசேனா உறவில் என்ன வேறுபாடுகள் இருந்தாலும் அது நாட்டின் வளர்ச்சியையும் மராட்டியத்தின் வளர்ச்சியையும் ஒருபோதும் பாதிக்காது. கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சினையில் பாஜக அரசுக்கு எதிராக நாங்கள் தான் முதலில் கேள்விகளை எழுப்புகிறோம். இதனால் தான் சரியான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்