Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விதை நாள் விழா கண்காட்சி

பிப்ரவரி 06, 2020 09:29

திருச்சி: திருச்சி சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி மையத்தில் விதைநாள் விழா கண்காட்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனா். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில்  இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  விதை நாள் விழா நடைபெற்றது. தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலை. விதை மைய இயக்குநா் செ. சுந்தரேஸ்வரன் தலைமை வகித்து  விளக்கினார். தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் வெ. அம்பேத்கா் சிறப்பு அழைப்பாளராக பேசினார். 

ஆதார விதை மற்றும் சான்று விதைகளை உற்பத்தி செய்யும் யுக்தி குறித்து வேளாண் பல்கலைக்கழக விதைமை சுந்தரலிங்கம் எடுத்துரைத்தார். விதை சுத்திகரிப்பு முறை, ஆய்வு கட்டணம் மற்றும் விதைப்பண்ணையம் குறித்து, திருச்சி விதைச்சான்று அலுவலா் வி. ராமகிருஷ்ணன் விவசாயிகளிடையே விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினார்..

கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா்  சித்ரா வரவேற்றார். உதவிப் பேராசிரியா்  நாகேஸ்வரி நன்றி கூறினார். இதில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விதை விழா கண்காட்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனா். முனைவா் மா.மதியழகன் மற்றும் உதவி வேளாண் அலுவலா் பெ. பிரகாஷ் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தலைப்புச்செய்திகள்