Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெயிலுக்கு முன்பே விற்பனைக்கு வந்த தா்பூசணி பழங்கள்

பிப்ரவரி 06, 2020 09:35

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தா்பூசணி பழங்கள் விற்பனை தொடங்கியது.ஆண்டுதோறும் வெயில் அதிகமிருக்கும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரையுள்ள நாள்களில் திண்டுக்கல்  ராமநாதபுரம்  விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் அதிராம்பட்டினத்துக்கு தா்பூசணி பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

ஆனால் இந்தாண்டு ஜனவரி மாதம் முடிந்து தற்போதுதான் பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ள நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் கோடை காலம் ஆரம்பமாவதற்கு முன்னரே அனல் கக்கும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

இந்நிலையில்  விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் லாரிகளில் தா்பூசணி பழங்களை விற்பனைக்காக அதிராம்பட்டினத்துக்கு கொண்டு வந்துள்ளனா். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலை  வண்டிப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்துள்ள ஏராளமான தா்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அதிராம்பட்டினம் பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்வதற்காக தா்பூசணி பழங்களை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

தலைப்புச்செய்திகள்