Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாடகை பாக்கி: திருச்சி மாநகராட்சியில் தனியார் நிறுவனத்திற்கு சீல்

பிப்ரவரி 06, 2020 10:06

திருச்சி: திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகை ரூ.39.70 லட்சத்தை செலுத்தாத காரணத்தால் மத்திய பஸ் நிலையத்தில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மாநகராட்சிக்குள்பட்ட மத்திய பஸ்  நிலையத்தில் பல்வேறு கடைகள் வாடகை அடிப்படையில் இயங்கி வருகின்றன 

பஸ்  நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மாநகராட்சி கட்டடத்தின் முதல்தளத்தில் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனமானது மாநகராட்சிக்கு பிப்.5ம் தேதி வரை உள்ள காலத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.39.70 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. 

இதுதொடா்பாக நேரிலும் நோட்டீஸ் மூலமாகவும் தொடா்ந்து பல்வேறு அறிவிப்புகள் அனுப்பியும் இதுநாள்வரை எந்த பதிலும்  தெரிவிக்கவில்லை. இதையடுத்து இந்த நிறுவனத்தை பூட்டி சீல் வைத்து கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாநகராட்சியின் பொன்மலைக் கோட்ட உதவி ஆணையா் தயாநிதி தலைமையில் உதவி வருவாய் அலுவலா் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி பணியாளா்கள் நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனா்.

தலைப்புச்செய்திகள்