Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வயதான மூதாட்டியிடம் 300 ரூபாய் மோசடி செய்த வாலிபர்: 37 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்

பிப்ரவரி 07, 2020 10:00

காஞ்சிபுரம்: காய்கறி விற்கும் மூதாட்டியிடம் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளைக் கொடுத்து, அவரை ஏமாற்றி காய்கறி வாங்கிய இளைஞருக்கு 37  ஆண்டுகள் சிறைத்தண்டனையை அளித்துள்ளது காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம். 

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. வயது முதிர்ந்தவரான இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரத்தில்  நடைபெறும் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். கடந்த 2015-ல் பாலுசெட்டி சத்திரம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துகொண்டிரு ந்தபோது காஞ்சிபுரம், சேதுராயன் தெருவைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் அந்த மூதாட்டியிடம் 300 ரூபாய்க்குக் காய்கறிகளை வாங்கினார்.

இதற்காக, அந்த மூதாட்டியிடம் மூன்று 100 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் சென்றபிறகுதான், `அந்த ரூபாய் நோட்டுகள்  செல்லாதவை, கலர் ஜெராக்ஸ் நோட்டுகளைக் கொடுத்து தன்னை ஏமாற்றிவிட்டார்' என்பது பிரேமாவுக்குத் தெரியவந்தது. இதனால் மிகுந்த ஏம £ற்றத்தில் இருந்தார் ஹேமா.

இந்நிலையில் அதற்கடுத்த வாரம் நடைபெற்ற வாரச் சந்தையிலும் அதே மூதாட்டியிடம் 300 கொடுத்து காய்கறிகளை வாங்க முயன்றார். அப்போது,  அவரைப் பிடித்துக் கொண்ட மூதாட்டி, ``போன தடவையும் 300 ரூபா கொடுத்து ஏமாத்துனஞ் இந்த தடவையும் ஏமாத்த வந்துட்டியா?” என அவரிடம்  சண்டை போட்டார்.
உடனே சந்தையிலிருந்தவர்கள் சுதர்சனை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து மூதாட்டியிடம் கொடுத்ததை  அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் சுதர்சன் ஒப்படைக்கப்பட்டார். கலர் ஜெராக்ஸ் எடுக்க  அவர் பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்ட பொருள்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கள்ள நோட்டு அச்சடித்தது, புழக்கத்தில் விட்டது, மூதாட்டியை ஏமாற்றியது எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் சுதர்சன் மீது காவல்துறையினர் வழக்கு  பதிவுசெய்தனர். காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் விரைவு நீதிமன்ற நீதிபதி கயல்விழி, `குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் அபராதத்துடன், 37 ஆண்டுகள் சிறைத்  தண்டனையை அனுபவிக்க வேண்டும்’ எனத் தீர்ப்பளித்தார். இதைச் சற்றும் எதிர்பாராத சுதர்சன் தலையில் இடிவிழுந்ததைப் போல எதுவும் பேச £மல் தரையில் உட்கார்ந்து கொண்டார். சிறைக்குச் செல்லும் முன்பு அவரின் மகளைச் சந்தித்த சுதர்சன், `அப்பா ஊசி போட்டுக்க ஹாஸ்பிட்டல்  போறேன்' என சமாதானப்படுத்தினார்.
 

தலைப்புச்செய்திகள்