Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலம் வாழப்பாடியில் கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

பிப்ரவரி 09, 2020 10:28

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழா  நடைபெற்றது. சுமார் 13 ஏக்கர் பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கிரிக்கெட் மைதானத்தை இன்று காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்