Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரசாயன மீன் விற்பதை தடுக்க கோரி சங்கு ஊதி கலெக்டரிடம் மனு

பிப்ரவரி 11, 2020 07:58

திருச்சி: ரசாயனம் அடித்து மீன் விற்பதை தடுக்க கோரி சங்கு ஊதி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் மாநகராட்சியால் வழங்கப்பட்ட கடைகளில் காய்கனி வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் நகர காய்கனி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தராஜூ  முன்னாள் ராணுவ வீரர் கந்தன் உள்ளிட்ட வியாபாரிகள்  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது்-

கடந்த 10 வாரமாக ஸ்ரீரங்கம் பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் திடீர் சந்தைகள் போடப்பட்டு வருகிறது. தெப்பக்குளம் அருகில் திங்கட்கிழமையும் கீதாபுரத்தில் வியாழக்கிழமையும் என 2 நாட்கள் மாலை வேளையில் காய்கனி வாரச்சந்தை நடத்தப்படுகிறது. இதனால்  எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுபற்றி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த திடீர் வாரச்சந்தையால் வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாரச்சந்தையை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்துல்சத்தார் உள்ளிட்ட சிலர் சங்கு ஊதியபடி மனு கொடுக்க வந்தனர். ஐக்கிய மக்கள் நல கழகம் சார்பில் கொடுத்த மனுவில்  திருச்சி புத்தூர் மீன்மார்க்கெட்டில் மீன்களில் ரசாயன மருந்து அடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

தலைப்புச்செய்திகள்