Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவேயே உலுக்கிய பாலியல் வழக்கு: காப்பக பொறுப்பாளருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

பிப்ரவரி 11, 2020 01:34

புதுடெல்லி: பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, முசாபர்பூர் விடுதி பாலியல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில், விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சவுரவ் குல்ஷ்ரேஷ்தா முசாபர்பூர் விடுதி காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்