Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று அழைத்தாலும் தோற்கடிக்க முடியலை: உத்தவ் தாக்கரே கருத்து

பிப்ரவரி 12, 2020 06:50

மும்பை: அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.க.,ஒரு பயங்கரவாதி என்று அழைத்தாலும் அவரை தோற்கடிக்க முடியவில்லை என டெல்லி தேர்தல் முடிவு குறித்து உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை கடந்த செவ்வாய்கிழமை காலை 8 மணிக்குத்தொடங்கி நடைபெற்றது.

ஓட்டுக்கள் எண்ணிக்கை முடிவில் ஆம் ஆத்மி கட்சி 62இடங்களிலும், பா.ஜ.க., 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் டெல்லியில் 3வது முறையாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைய உள்ளது.

இந்நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே பேசுகையில், ''டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தில்லி மக்களை வாழ்த்துகிறேன். 

நாடு 'மன் கி பாத்' அல்லாமல் 'ஜன் கி பாத்' வழியில் நடக்கும் என மக்கள் டெல்லி தேர்தல் மூலமாககாட்டியுள்ளனர். கெஜ்ரிவாலை பா.ஜ.க.,ஒரு பயங்கரவாதி என்று அழைத்தாலும் அவரை தோற்கடிக்க முடியவில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்