Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்

பிப்ரவரி 13, 2020 02:51

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் நெல் அறுவடையில் ஈடுபடும் இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் த. ரத்னா வெளியிட்ட செய்திக் குறிப்பில் அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா.பழூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை வட்டாரங்களில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது.

நெல் அறுவடை இயந்திரங்களின் மூலமே பெரும்பாலும் செய்யப்படுவதால் அறுவடை இயந்திரங்களின் வாடகையை ஒழுங்குபடுத்தும் பொருட்டு (தனியார்) பெல்ட் டைப் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு நிலத்தின் ஈரத்தன்மையைப் பொறுத்து மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1600 முதல் ரூ.1800 வரையும்  டயா் டைப் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு நிலத்தின் ஈரத்தன்மையை பொறுத்து மணி ஒன்றுக்கு ரூ.1200 முதல் ரூ.1300 வரையும் என வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதில்  ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும் தருணத்தில் வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் துறையை விவசாயிகளும் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்களும் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்