Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவின் மீது பின்னலாடை வர்த்தகர்களின் பார்வை உள்ளது: ஆயத்த ஆடை ஏற்றுமதி தலைவர் தகவல்

பிப்ரவரி 14, 2020 08:39

திருப்பூர்: கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிறநாட்டு பின்னலாடை வர்த்தகர்களின் பார்வை இந்தியாவின் மீது உள்ளது என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகத் தலைவர் சக்திவேல் திருப்பூரில் தெரிவித்தார்.

திருப்பூரில் வருகின்ற 17ம் தேதி 47வது ஆயத்த ஆடை கண்காட்சி துவங்கப்பட உள்ள நிலையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கழகத் தலைவர் சக்திவேல் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது:

இந்தியா தற்போது உலகளவில் 16 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி செய்து வருகிறது. அதை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிேறாம். மேலும் இந்தியாவின் ஆடைகள் எந்தெந்த நாட்டிற்கு தேவை? என்பது குறித்து ஆய்வு செய்து முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. அதன் மூலம் பின்னலாடை வர்த்தகத்தில் பெரிய வளர்ச்சி ஏற்படும்.

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பிற நாட்டு பின்னலாடை வர்த்தகர்கள் இந்தியாவின் மீது தனது கவனத்தை செலுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியிலும் 500 சீனா உற்பத்தியாளர்கள் வராததால் இந்தியா அமைத்திருந்த 56 ஸ்டால்களிலும் வெளிநாட்டு வர்த்தகர்கள்  பார்வையிட்டனர். நிச்சயமாக இந்தாண்டு பின்னலாடை ஏற்றுமதி 15 முதல் 20 சதவீதம் வரை உயரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்