Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயன்பாட்டுக்கு வராத கள்ளிக்குடி காய்கனி சந்தை: தலைமைச் செயலா் ஆய்வு

பிப்ரவரி 16, 2020 12:22

திருச்சி: திருச்சி அருகே கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ள தினசரி காய்கனி சந்தையை தமிழக அரசின் தலைமைச் செயலா் க. சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி காந்திமாக்கெட் பகுதியில் உள்ள தினசரி காய்கனி சந்தையானது நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் திருச்சி மாநகராட்சியை பொலிவுறு நகரமாக்கும் திட்டத்தில் இந்தப் பகுதியை மேம்படுத்துவதற்காக காந்திமார்க்கெட் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 10 ஏக்கரில் நிலம் தோ்வு செய்யப்பட்டு ரூ.77 கோடியில் கடைகள் உணவகம் வங்கி ஏடிஎம்தொழிலாளா்கள் தங்கும் இடம் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டடம் கட்டப்பட்டது.

இந்த மார்க்கெட் தமிழக முதல்வரால் கடந்த 2017 செப்டம்பா் மாதம் காணொலிக் காட்சி மூலம் திறக்கப்பட்டது. ஆனால்இ இந்தப் பகுதியானது நகரப் பகுதியிலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகக் கூறி வியாபாரிகள் யாரும் கள்ளிக்குடி மாா்க்கெட்டுக்கு வரவில்லை. பல்வேறு கட்ட முயற்சிக்குப் பிறகு கடந்தாண்டு மார்க்கெட் திறக்கப்பட்டு ஒரு நாள் மட்டும் இயங்கிய நிலையில் வியாபாரிகள்  பொதுமக்கள் ஆதரவின்றி மீண்டும் மூடப்பட்டது.

பயன்பாட்டுக்கு வராமல் உள்ள இந்த கட்டடத்தை தமிழக அரசின் தலைமைச் செயலா் க. சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சிக்கு வருகை தந்த அவா்  கள்ளிக்குடியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் இருந்த மாா்க்கெட் பகுதியையும் பார்வையிட்டார்கள். இதுதொடா்பாக  திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் வருவாய்த்துறை வேளாண்மைத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். மார்க்கெட் கட்டடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஆலோசனை வழங்கினார். தொடா்ந்து ஐஐஐடி நிறுவன கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது உயா்கல்வித்துறையின் அரசு முதன்மைச் செயலா் அபூா்வா தொழில்நுட்ப கல்வி இயக்குநா் கே. விவேகானந்தன்  சார்-ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்  மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி  வேளாண்மை துணை இயக்குநா் (வணிகம்) கே. முருகன் திருச்சி விற்பனை குழு செயலா் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனா்.

பின்னா்  செய்தியாள்களிடம் ஆட்சியா் சு. சிவராசு கூறுகையில்  தலைமைச் செயலரின் ஆலோசனைப்படி கள்ளிக்குடி மார்க்கெட் விரைந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட விவசாயிகள்  உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தகுதியுள்ள குழுக்கள்  சிறு  குறு தொழில்களுக்கு பயனுள்ள வகையில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றார்.

தலைப்புச்செய்திகள்