Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பின்னலாடைத் துறையை மேம்படுத்த பல்வேறு சலுகைகள் வழங்கல் கைத்தறி, துணிநூல் துறை இயக்குனர் தகவல்

பிப்ரவரி 17, 2020 12:37

திருப்பூர்: தமிழகத்தில் பின்னலாடைத் துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தொழிற்கொள்கை மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக 47 வது ஆயத்த ஆடை கண்காட்சியை திறந்து வைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருனாகரன் திருப்பூரில் தெரிவித்தார்.

திருப்பூரில் 47வது ஆயத்த ஆடைகள் கண்காட்சி பழங்கரை பகுதியில் உள்ள ஐகேஎப் கண்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது . 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன், ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக தலைவர் சக்திவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன், தமிழக அரசு பின்னலாடை துறையினை  மேம்படுத்த புதிய தொழிற்கொள்கையின் மூலம் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.  பின்னலாடை துறையினருக்கு ஊக்க நிதி அளிக்க விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதேபோல் கடன் பெரும் நிறுவனங்களுக்கான 4 சதவீத மானியத்தை 6 சதவீதமாக உயர்த்தி உள்ளோம். மேலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்