Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு திருப்பூரில் தொடர் முழக்க போராட்டம்

பிப்ரவரி 17, 2020 12:39

திருப்பூர்: திருப்பூர் பி.என் ரோடு  பகுதியில் திருப்பூர் அனைத்து இஸ்லாமிய ஜமாத்  கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற  வலியுறுத்தியும்,  மத்திய அரசைக் கண்டித்தும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

பி.என் ரோடு  பகுதியில் திருப்பூர் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற   வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். தொடர்ச்சியாக மக்கள் கொந்தளித்து வருகிறார்கள். குறிப்பாக பல்வேறு தளங்களில் இஸ்லாமிய போராட்டமாக கூறுகிறார்கள். இது இஸ்லாமிய போராட்டம் அல்ல.

அதாவது சி.ஏ.ஏ., என்பது மனித இனத்திற்கு எதிரான ஒன்று. என்.ஆர்.சி., என்.பி.ஆர்.,  என்பது இந்திய மக்களுக்கு எதிரான சட்டம். இதை இஸ்லாமிய மக்கள் முன்னெடுத்துள்ளார்கள். அனைத்து சகோதரர்களும் சங் பெரிவார் அமைப்புகளை தவிர்த்த அனைத்து சகோதரர்களும் ஆதரவு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, வருகின்ற 19ம் தேதி சட்டப்பேரவை முன் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இனி வரும்காலங்களில் இஸ்லாமிய போராட்டங்களாக சுருக்கி மிகப்பெரிய ஒரு மதப்பிரச்சனைகளை ஏற்படுத்த சங் பரிவார் அமைப்புகள் முயல்கிறார்கள். அனைத்து ஜனநாயக ஒற்றுமை தலைவர்களும் ஒருகிணைந்து இந்த போராட்டத்தில் வெல்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில், மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா, அனைத்து இஸ்லாமிய ஜமாத்  கூட்டமைப்பு மற்றும் பொது மக்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்