Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு முறைகேடு: திமுக மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி

பிப்ரவரி 17, 2020 12:58

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக திமுக தரப்பில் மனுதாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி, தேர்வினை ரத்து செய்ய உத்தரவிடுமாறு சொப்னா என்ற திருநங்கை  மனுத்தாக்கல் செய்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை அறிக்கை அளித்து வந்தனர்.இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொய்யப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது, இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தி ஒரு தனியார் தொலைக்காட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், விசாரணையானது நியாயமாக இருக்காது. இதில் அரசு அதிகாரிகளே முறைகேடு மூலமாக பணிக்கு வந்தால், எவ்வாறு ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்று சாடினார். அச்சமயம் திமுக தரப்பில் அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு ஒரு இடையீட்டு மனுதாக்கல் செய்யவிருப்பதாகவும், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வாதித்தார். 

இந்த வழக்கை பொறுத்தவரை 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 65 பேர் ஒரு குறிப்பிட்ட இரண்டு பயிற்சி மையத்தில் இருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அரசு பாதுகாக்க முயற்சிக்கிறது.தற்போது 3 விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு 4வது விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த அரசுக்கு சாதகமாக அறிக்கை அளிக்கவே முயற்சி மேற்கொள்கிறார். அதுமட்டுமின்றி இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் வெளிமாநிலத்தில் அச்சிடப்பட்டு கொண்டு வருகின்ற காரணத்தால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்