Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத்தில் சரக்கு கப்பலில் ஏவுகணை தயாரிக்கும் வேதிப் பொருட்கள்?

பிப்ரவரி 17, 2020 12:59

காந்தி நகர்: குஜராத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட, பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய சரக்கு கப்பலில் ஏவுகணை தயாரிக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சியாங்சூ மாகாணத்தில் உள்ள சியாங்கின் துறைமுகத்தில் இருந்து ஜனவரி 17ம் தேதி புறப்பட்டு பாகிஸ்தான் கராச்சி துறைமுகம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த சரக்கு கப்பல், பிப்ரவரி 3ம் தேதியன்று குஜராத் அருகே நங்கூரமிடப்பட்டது. இந்த கப்பலில் ஏவுகணை தயாரிக்கும் வேதிப் பொருட்கள் இருப்பதாக இந்திய உளவு அமைப்புக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து குஜராத் கண்டாலா துறைமுகம் பாதுகாவலர்கள் உதவியுடன், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கப்பலில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் ஆட்டோ கிளாவ கொண்டு செல்லப்பட்டதை இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆட்டோ கிளாவ எனபது ஏவுகணை தயாரிப்புக்கு தேவையானது என்பது விசாரணையில் தெரிய வந்துளளது. சோதனையின் முடிவில், ஏவுகணைக்கு தேவையான வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சீன நாட்டு கப்பலை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் உரிமையாளர் மீது வழக்கு தொடர குஜராத் துறைமுக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  

தலைப்புச்செய்திகள்