Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முடிவுக்கு வந்த நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு 

பிப்ரவரி 17, 2020 01:00

புதுடில்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் வரும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டில்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.2012 ம் ஆண்டு டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜன.,22ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், பிப்.,1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தூக்கிலிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். 

குற்றவாளிகள் அனைவரும் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் அடுத்தடுத்து விசாரித்து சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வு, அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. சிறார் என கருதக்கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை பிற்பகலில் விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அனைத்து விதமான சட்ட முறையீடுகளும் முடிக்கப்பட்டது. ஆனாலும், 4 குற்றவாளிகளும் தூக்கு தண்டனைக்கு தடை கேட்டு அடுத்தடுத்து மனு தாக்கல் செய்ததால் பிப்.,1ம் தேதி நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

2 முறை தூக்கிலிடுவது தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தூக்கிடுவதற்கான வாரண்டை 3வது முறையாக டில்லி நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. அதில், மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்