Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராணுவ உயர் பதவியிலும் பெண்கள்: சுப்ரீம் கோர்ட் 

பிப்ரவரி 17, 2020 01:01

புதுடில்லி : ராணுவ உயர் பதவியில் பெண்களை அனுமதிக்கலாம். அதற்கு மனநிலையில் தான் மாற்றம் ஏற்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்களான மீனாட்சி லேகி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். உயர் பதவியில் பெண்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தனர். 

இவ்வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில், கிராமப்புற பின்னணயில் இருந்தே பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சேர்கிறார்கள். தற்போதைய சமூக நடைமுறைக்கு ஏற்றவாறு பெண்களை தளபதிகளாக ஏற்றுக் கொள்ள மனதளவில் இன்னும் அவர்கள் தயாராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மனுதாரர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ராணுவத்தில் பெண்கள் சாதனை குறித்து பலரை அவர்கள் உதாரணமாக கூறி வாதிட்டனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு,தொடர் இடமாற்றங்கள்,பெண்களுக்கு பாராமாக இருக்கும்.கணவர்களின் தொழிலை பாதிக்கும்..பிரசவ காலவிடுமுறை அளிக்கப்படுவதும் பெண்களுக்கு உயர் பதவிக்கு வருவதற்கு சவாலாக இருக்கும் . போர்ச் சூழலில் எதிரிகள் பெண்களை கடத்தி செல்ல வாய்ப்பு உள்ளது என வாதிட்டது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், தேசிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறன் போன்ற கொள்கைகளை உருவாக்கும் போது அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும். பெண்களை உயர் அதிகாரிகளாக அனுமதிப்பது கடினம் என அரசு தரப்பு கூறுவதை ஏற்க முடியாது. 

காலங்கள் மாறிவரும் சூழலில் ஆண்களின் மனநிலையில் மாற்றம் தேவை. ராணுவத்தில் சேவை செய்ய பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பாலின பாகுபாட்டை களைய அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும். பெண்கள் குறித்த உங்களின் மன நிலை தான் மாற வேண்டும். பெண்களின் உடலியல் அம்சங்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெண்களை ராணுவத்தின் உயர் பதவியில் நியமிக்கலாம் என அதிரடியாக தீர்ப்பு சொல்லியுள்ளது.

தலைப்புச்செய்திகள்