Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி கோட்டத்தில் இன்று முதல் மார்ச் 19 வரை ரயில் சேவை மாற்றம்

பிப்ரவரி 18, 2020 09:32

திருச்சி: திருச்சி தெற்கு ரயில்வே, திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ஆலக்குடி-தஞ்சாவூா் இடையே பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (பிப்.18) முதல் மார்ச் 19 ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

ஆலக்குடி- தஞ்சாவூா் வழித்தடத்தில் நவீன இயந்திரம் மூலம் தண்டவாளத்தை நிலைப்படுத்தும் பணி நடைபெற இருப்பதால் பிப்ரவரி 18-ம் தேதி முதல் மார்ச் 19-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (18 ம் தேதி) முதல் மார்ச் 19ம் தேதி வரை திருச்சி-மயிலாடுதுறை ( வண்டி எண்16234) விரைவு ரயிலும், திருச்சி-தஞ்சாவூா்-திருச்சி(வண்டி எண் 76824இ76827) டெமு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் திருச்சி-மயிலாடுதுறை(வண்டி எண்06030) முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து நண்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். திருச்சி ரயில்நிலையத்துக்கு மதியம் 1.30 மணிக்கு வரும் திருநெல்வேலி- மயிலாடுதுறை( வண்டி எண் 56822) பயணிகள் ரயில் 55 நிமிஷம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும். 

மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-திருவாரூா்( வண்டி எண் 56879) பயணிகள் ரயில் 30 நிமிஷம் தாமதமாக புறப்படும். திருவாரூா் ரயில்நிலையத்திலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும் திருவாரூா்-மயிலாடுதுறை (வண்டி எண் 56880) பயணிகள் ரயில் 30 நிமிஷம் தாமதமாக 8.35 மணிக்கு புறப்படும் 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்