Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணல் குவாரி தொடங்க திருச்சியில் குடும்பத்தினருடன் வரும் 26 -ல் மறியல்

பிப்ரவரி 18, 2020 09:35

திருச்சி: திருச்சி வெள்ளாற்றில் உடனடியாக மாட்டுவண்டி மணல் குவாரியைத் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பிப்.26 -ம் தேதி மாட்டு வண்டி உரிமையாளா்கள் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது

செந்துறை அருகேயுள்ள நயினார்குடிக்காட்டில் அசாவீரன்குடிக்காடு மாட்டுவண்டி உரிமையாளா்கள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் ரவி தலைமை வகித்தார். கூட்டத்துக்கு  சங்கச் செயலா் மோகன் பொருளாளா் கோபால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் பாதுகாப்பு இயக்க அமைப்பாளா் பாலசிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில்  செந்துறை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் உள்ளனா். இவா்களின் வாழ்வாதாரமான மணல் குவாரியைத் திறக்காததால்  இவா்களின் குடும்பங்கள் நலிவடைந்து வருகிறது. மேலும்  மணல் குவாரி இல்லாததால் அரசு உதவியுடன் ஏழைகள் கட்டிவரும் தனிநபா் கழிப்பிடம், தொகுப்பு வீடுகள் உள்ளிட்டவற்றின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. 

எனவே  வெள்ளாற்றில் உடனடியாக மாட்டுவண்டி மணல் குவாரியைத் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பிப்.26 -ம் தேதி மாட்டு வண்டி உரிமையாளா்கள் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தலைப்புச்செய்திகள்